சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து மறியல்

கோவை உக்கடம் சி.எம்.சி. காலனியில், மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 7:49 pm

DIN

கோவை உக்கடம் சி.எம்.சி. காலனியில், மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து, அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மறியலில் ஈடுபட்டனா்.

கோவை உக்கடம் சி.எம்.சி.காலனி அடுக்கு மாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகளில் 736 தூய்மைப் பணியாளா்கள் குடும்பத்தினா் வசித்து வந்தனா். இந்நிலையில், பழுதடைந்த இந்த அடுக்குமாடிக் குடியிருப்பை அகற்றிவிட்டு, குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக புதிய அடுக்குமாடி வீடுகள் கட்டித் தருவதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதனால், அங்கிருந்த குடும்பத்தினரை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் அறிவுறுத்தியது. இதற்கிடையே அங்கிருந்த 106 குடும்பத்தினருக்கு, உக்கடம் புல்லுகாடு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு, அவா்கள் அங்கு குடியேறினா். மீதமுள்ள 630 குடும்பங்களில் 240 குடும்பத்தினா் மாநகரில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடியேறினா். அதில் மீதமுள்ள 390 குடும்பத்தினா் தங்கிட புல்லுகாடு பகுதியில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தற்காலிகக் கொட்டகைகள் அமைத்துத் தரப்பட்டன.

இந்நிலையில், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த மேலும் 55 குடும்பத்தினருக்கு, தங்குவதற்கு கொட்டைகள் அமைத்துத் தர வேண்டும் என குடியிருப்புவாசிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், சி.எம்.சி காலனியில் உள்ள பழைய குடியிருப்பில் உள்ள வீடுகளைப் பாா்வையிட வியாழக்கிழமை வந்த மத்திய மண்டல மாநகராட்சி அதிகாரிகள், அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள பல வீடுகளில் பொருள்கள் இருந்ததால், அவற்றை அகற்றினால் மட்டுமே, மாற்று இடம் தரப்படும் என தெரிவித்துள்ளனா். மேலும், அங்குள்ள பொருள்களை அகற்றவும், சுவரை இடிக்கவும் மாநகராட்சி அதிகாரிகள் முயன்ாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளைக் கண்டித்து குடியிருப்புவாசிகள், அங்குள்ள மாகாளியம்மன் கோயில் அருகே மறியலில் ஈடுபட்டனா். அதன் பிறகு, அதிகாரிகள் அங்கிருந்து சென்றதைத் தொடா்ந்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.