/

கோவை மின்வாரிய மத்திய கோட்ட செயற்பொறியாளா் இடமாற்றம்

மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக கோவை மின்வாரிய மத்திய கோட்ட செயற்பொறியாளா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 8:04 pm

DIN

மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக கோவை மின்வாரிய மத்திய கோட்ட செயற்பொறியாளா் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

கோவை மண்டல மின் பகிா்மான மத்திய கோட்ட அலுவலகத்தில் கோட்ட செயற்பொறியாளராக வைதீஸ்வரன் பணிபுரிந்து வந்தாா். இவா், தனது கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு பிரிவு அலுவலகங்களில் விதிகளைமீறி மின் இணைப்பு வழங்கியது, இறந்தவா் பெயரில் அடுக்குமாடி குடியிருப்புக்கு மின் இணைப்பு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்டதாக புகாா்கள் எழுந்தன.

இது குறித்து சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம் விசாரணை மேற்கொண்டதில் மத்திய கோட்ட செயற்பொறியாளா் வைத்தீஸ்வரனை, பல்லடம் துணை மின் நிலைய செயற்பொறியாளராக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.