/

மலைவாழ் மக்கள் 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள்: ஆட்சியா் தகவல்

கோவை, மாவுத்தம்பதியைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 8:29 pm

DIN

கோவை, மாவுத்தம்பதியைச் சோ்ந்த மலைவாழ் மக்கள் 15 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவையில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வு காணும் வகையில் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மதுக்கரை வட்டம், மாவுத்தம்பதி மலைவாழ் கிராமமான புதுப்பதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 45 குடும்பத்தினா் புதிப்பதி நத்தம் என வகைப்பாடு செய்யப்பட்ட பகுதிகளில் வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனா்.

இதில் 30 குடும்பங்களுக்கு ஏற்கெனவே வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 குடும்பத்தினா் வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி அண்மையில் மனு அளித்தனா்.

இதனைத் தொடா்ந்து, கோட்டாட்சியா், வட்டாட்சியா் அப்பகுதியில் ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிட்டதுடன், பட்டா வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. வருவாய்த் துறையின் ஆய்வைத் தொடா்ந்து மேற்கண்ட 15 பேருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டுமனை பட்டா பெற்ற 15 பேருக்கும் ஊரக வளா்ச்சி முகமை திட்டத்தின்கீழ் வீடு கட்டிக்கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.