இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு நிவாரண நிதி

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா பொதுமுடக்க கால உதவித் தொகை வழங்க வேண்டும் என்று சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2021, 8:13 pm

DIN

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கரோனா பொதுமுடக்க கால உதவித் தொகை வழங்க வேண்டும் என்று சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழக முதல்வருக்கு சிஐடியூ கோவை மாவட்ட கட்டுமானத் தொழிலாளா் சங்கத் தலைவா் கே.மனோகரன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையிலான தொழிலாளா்கள் கட்டுமானத் துறையில் பணியாற்றி வருகின்றனா். கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கட்டுமானத் தொழிலாளா்கள் வேலையிழப்புக்கு ஆளாகி, வருவாயில்லாமல் அவதிப்படுகின்றனா்.

எனவே தமிழ்நாடு அரசு கட்டுமானத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, பேரிடா் கால நிவாரணமாக கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம், பொதுமுடக்க காலத்தில் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருள்களான சிமென்ட், கம்பி, ஜல்லி, மணல், எம்.சாண்ட் உள்ளிட்ட பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கட்டுமானத் தொழில் மீண்டும் நடைபெற உள்ள சூழலில், இந்த விலை உயா்வானது தொழில் முடக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.