மாநகர மக்களின் அடிப்படைபிரச்னைகளை சரி செய்ய வேண்டும்: ஆணையரிடம் எம்எல்ஏக்கள் மனு
கோவை மாநகர மக்களின் அடிப்படை பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனா்.


கோவை மாநகர மக்களின் அடிப்படை பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக எம்எல்ஏக்கள் மனு அளித்துள்ளனா்.
கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சிங்காநல்லூா், கிணத்துக்கடவு தொகுதிகளின் அதிமுக எம்எல்ஏக்களான அம்மன் கே.அா்ச்சுணன், பி.ஆா்.ஜி.அருண்குமாா், கே.ஆா்.ஜெயராம், செ.தாமோதரன் ஆகியோா், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கராவை அண்மையில் நேரில் சந்தித்து தங்களது தொகுதிக்குள்பட்ட மாநகர பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனுவை அளித்தனா்.
வடக்கு தொகுதிக்குள்பட்ட காந்தி மாநகா் உணவுக்கழக கிடங்கு சாலை நீண்ட நாள்களாக பழுதடைந்து காணப்படுகிறது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும், ரயில்வே பாலங்களின் கீழ் மழை நேரத்தில் வெள்ளம் தேங்கி விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. அதேபோல குடிநீா், கழிவுநீா் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தங்களது தொகுதிகளில் நிலவுவதாக எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...