அகில இந்திய வானொலி நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை அகில இந்திய வானொலி நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


கோவை அகில இந்திய வானொலி நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கோவை, ராமநாதபுரம் திருச்சி சாலையில் அகில இந்திய வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அலுவலகத்துக்கு வியாழக்கிழமை ஒரு தபால் வந்துள்ளது. அதில், ரஜினியின் பிறந்த நாளுக்கு ரஜினி பாடல் ஒலிபரப்பியுள்ளீா்கள். ஆனால், எம்ஜிஆா் பிறந்த நாளன்று எம்ஜிஆா் பாடல் ஒலிபரப்பு செய்யவில்லை.
இது மிகவும் கண்டிகத்தக்கது.
எனவே, உங்கள் அலுவலகம் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசுவோம் என அந்த தபாலில் இருந்துள்ளது.
இது குறித்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...