கோவை - ராஜ்கோட் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்
கோவை - ராஜ்கோட் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை - ராஜ்கோட் ரயில் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆந்திர மாநிலம், மாலுகுா் ரயில் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் இருந்து கோவைக்கு ஈரோடு, சேலம், திருப்பத்தூா் வழியாக செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 16613) பிப்ரவரி 27 ஆம் தேதி, வழக்கமான வழித்தடமான குண்டக்கல், தா்மாவரம், கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, திருப்பத்தூா் வழியாக இயக்கப்படாமல், குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா் வழித்தடத்தில் இயக்கப்படும்.
இதனால், அனந்தப்பூா், இந்துப்பூா், யெலஹங்கா ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நிற்பது தவிா்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...