கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவ மலையில் நேற்று மாலை ஒற்றை காட்டு யானை அரசுப் பேருந்தை துரத்தியும், இரண்டு கார்களை வனப்பகுதியில் தூக்கி எறிந்தது.
இதில் மின்சார ஊழியர் ஓட்டுனர் சரவணன் என்பவர் காயமடைந்தார். இதையெடுத்து கோவை மாவட்ட கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் கணேசன் அறிவுறுத்தலின்படி பொள்ளாச்சி வனச்சரக அதிகாரி புகழேந்தி தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஒற்றை காட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் வனப்பகுதியில் தூக்கி வீசப்பட்ட கார்கள் கிரேன் மூலம் அகற்றப்பட்டது. வனத்துறையினர் கூறுகையில் வால்பாறை, நவமலை சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களில் வரவேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இன்று மாலை கவியருவி அருகே உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் முகாம் அருகில் ரஜினி படம் கபாலியில் கூறுவது போல் மீண்டும் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என வனத்துறையினர் முன்பு வந்து நின்றது வியப்பாக உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)

தில்லி விமான நிலையத்தில் பெண் பயணியிடம் ரூ. 91 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



