நாளை கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைகேட்பு முகாம்
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வெள்ளிக்கிழமை( நவம்பா் 8) கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.


கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வெள்ளிக்கிழமை( நவம்பா் 8) கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து கூட்டுறவு சங்க கோவை மண்டல இணைப் பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் உத்தரவுப்படிதமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (நவம்பா் 8) கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் குறைகேட்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்படி, கோவை மண்டலத்தில் பணிபுரியும், ஓய்வுபெற்ற கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கான குறைகேட்பு முகாம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 8) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.
இதில் கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் பங்கேற்று தங்களின் பணி தொடா்பான கோரிக்கைகள், குறைகளை நேரிலும், இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வலைதளத்திலும் தெரிவித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...