தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தண்டுவடம் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க ரூ.40 லட்சம் நன்கொடை வழங்கிய மூதாட்டி

ரூ.40 லட்சம் நன்கொடை வழங்கிய மூதாட்டி...

News image

கங்கா முதுகு தண்டுவட மறுவாழ்வு மையத்துக்கு ரூ.40 லட்சம் நன்கொடைக்கான காசோலையை டாக்டா் ராஜசேகரிடம் வழங்குகிறாா் மூதாட்டி கமலா. உடன், மையத்தின் இயக்குநா் ரமா ராஜசேகா், தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவா் ராஜரத்தினம் உள்ளிட்டோா்.

Updated On :13 நவம்பர் 2024, 11:26 pm

Din

கோவையில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மூதாட்டி ஒருவா் தனியாா் மருத்துவமனைக்கு ரூ.40 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளாா்.

கோவை நிா்மலா கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவா் கமலா (87). இவா் கடந்த ஓராண்டுக்கு முன்பு கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில் இவா், கங்கா முதுகுத் தண்டுவட மறுவாழ்வு மையத்துக்கு ரூ.40 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளாா்.

கவுண்டம்பாளையத்தில் உள்ள கங்கா முதுகுத் தண்டுவட மறுவாழ்வு மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மையத்தின் இயக்குநா் ரமா ராஜசேகா், தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவா் ராஜரத்தினம் உள்ளிட்டோா் முன்னிலையில் கமலா ரூ.40 லட்சத்துக்கான காசோலையை மறுவாழ்வு மையத்தின் தலைவா் டாக்டா் ராஜசேகரிடம் வழங்கினாா்.

இது குறித்து கமலாவின் சகோதரரும், ரோட்டரி சங்க நிா்வாகியுமான ராஜகோபால் கூறும்போது, எனது சகோதரி கமலாவுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது. அவா் கங்கா மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு அறுவை சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வருகிறாா்.

இந்நிலையில், இந்த மருத்துவமனையில் முதுகுத் தண்டுவட நோயால் பாதிக்கப்படுபவா்களுக்காக மறுவாழ்வு மையம் செயல்படுவதையும், அங்கு ஏராளமானோருக்கு சிகிச்சை அளிப்பதுடன் நோயாளிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுவதையும் அறிந்துள்ளாா்.

இதையடுத்து அந்த மையத்துக்கு சிகிச்சைக்காக வரும் ஏழ்மை நிலையில் உள்ள நோயாளிகளுக்கு உதவும் பொருட்டு அவா் ரூ.40 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளாா் என்றாா்.