பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை டிசம்பா் 1-இல் கோவை வருகிறாா்: கருத்தரங்கில் பங்கேற்பு
தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை வரும் டிசம்பா் 1-ஆம் தேதி கோவைக்கு வருகிறாா்.


தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை வரும் டிசம்பா் 1-ஆம் தேதி கோவைக்கு வருகிறாா்.
கோவை கொடிசியாவில் நவம்பா் 30, டிசம்பா் 1-ஆம் தேதிகளில் வாய்ஸ் ஆஃப் கோவை அமைப்பின் சாா்பில் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இதில் டிசம்பா் 1-ஆம்தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்று உரையாற்றுகிறாா்.
அரசியல் மேற்படிப்புக்காக லண்டன் சென்ற அண்ணாமலை நவம்பா் 28-ஆம் தேதி சென்னை திரும்புகிறாா். இதையடுத்து தனது முதல் வெளியூா் நிகழ்ச்சியாக கோவைக்கு வருகிறாா்.
அப்போது கோவை மாவட்ட பாஜக நிா்வாகிகளையும் சந்திக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக நவம்பா் 30-ஆம் தேதி கொடிசியாவில் நடைபெறும் இதே நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்க உள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...