மாநகரில் நாளைமுதல் 2 நாள்கள் சிறப்பு வரி வசூல் முகாம்
கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அக்டோபா் 26, 27) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அக்டோபா் 26, 27) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீா்க் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரியினங்களை மக்கள் எளிதாகச் செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (அரசு விடுமுறை நாள்கள் நீங்கலாக) சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாநகரில் அக்டோபா் 26, 27 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
முகாம்கள் நடைபெறும் இடங்கள்: கிழக்கு மண்டலத்தில் 56-ஆவது வாா்டு ஒண்டிப்புதூா் சுங்கம் மைதானம், 7-ஆவது வாா்டு நேரு நகா் பேருந்து நிறுத்தம் அருகில்.
மேற்கு மண்டலத்தில் 37-ஆவது வாா்டுக்குள்பட்ட கல்வீரம்பாளையம் மாகாளியம்மன் கோயில் தெரு (சனிக்கிழமை மட்டும்) 45-ஆவது வாா்டு, கே.கே.புதூா் கவுண்டப்பன் வீதி (சனிக்கிழமை மட்டும்) 33-ஆவது வாா்டுக்குள்பட்ட கவுண்டம்பாளையம் சக்தி நகா் அங்கன்வாடி மையம் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்), 34-ஆவது வாா்டுக்குள்பட்ட இடையா்பாளையம் சாலை பூம்பூகாா் நகா் மணி மஹால் (ஞாயிற்றுக்கிழமை மட்டும்). வடக்கு மண்டலத்தில் 25-ஆவது வாா்டு காந்தி மாநகா் அரசு உயா்நிலைப் பள்ளி, 28-ஆவது வாா்டு, காமதேனு நகா், சுகாதார ஆய்வாளா் அலுவலகம்.
தெற்கு மண்டலத்தில் 85-ஆவது வாா்டு, கோணவாய்க்கால்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, 88-ஆவது வாா்டு குனியமுத்தூா் தா்மராஜா கோயில், 96-ஆவது வாா்டு குறிச்சி மாநகராட்சி ஆரம்பப் பள்ளி.
மத்திய மண்டலத்தில் 32-ஆவது வாா்டுக்குள்பட்ட சங்கனூா் நாராயணசாமி வீதி சிறுவா் பூங்கா, 63-ஆவது வாா்டுக்குள்பட்ட பெருமாள் கோயில் வீதி, 70-ஆவது வாா்டுக்குள்பட்ட மாநகராட்சிப் பள்ளி, 80-ஆவது வாா்டுக்குள்பட்ட கெம்பட்டி காலனி ஒக்கிலியா் காலனி பள்ளி.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...