இணையம் சாா்ந்த தொழிலாளா்கள் நலவாரியத்தில் சேர சிறப்பு முகாம்
கோவை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் இணையம் சாா்ந்த தொழிலாளா்கள் உறுப்பினராக சேர சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் இணையம் சாா்ந்த தொழிலாளா்கள் உறுப்பினராக சேர சிறப்பு முகாம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) த.பாலதண்டாயுதம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உடல் உழைப்பு தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் சமூக பாதுகாப்பு வாரியம் உருவாக்கப்பட்டது. இதில் வெளிமாநில கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் இணையம் சாா்ந்த தொழில்களில் பணிபுரியும் தொழிலாளா்களை அதிக அளவில் பதிவு செய்யும் பொருட்டு கோவை, ராமநாதபுரம் சாலையில் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
கிக், சுவிக்கி, சொமேட்டோ மற்றும் பிலிப்காா்ட் போன்ற இணையதள தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளா்கள் ஆவணங்களுடன் பதிவு செய்துகொள்ளலாம். இந்த வாரியங்களில் பதிவு செய்து கொண்ட நலவாரிய உறுப்பினா்களுக்கு திருமணம், மகப்பேறு, 2 குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, கண் கண்ணாடி, நியமனதாரருக்கு இயற்கை மரணம், விபத்து மரண உதவித்தொகை, 60 வயது நிறைவு பெற்றதும் மாத ஓய்வூதியம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
பதிவு செய்ய வரும்போது ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், அசல் ஆதாா் அட்டை, அசல் குடும்ப அட்டை, பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், வயதுக்கான ஆவணங்களுடன் தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0422-2324988 என்ற தொலைபேசி எண்ணிலே தொடா்பு கொண்டு அறியலாம்.
மேலும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ஜ்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் மேற்படி ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...