இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சத்குரு ஜக்கி வாசுதேவின் முன்னெடுப்புகள் உலகுக்கான முன்மாதிரி: ஐக்கிய அரபு அமீரக அமைச்சா் ஷேக் நஹ்யான்

நாடுகளிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவின் முன்னெடுப்புகள் உலகுக்கான முன் மாதிரியாக உள்ளது

News image
ஐக்கிய அரபு அமீரக அமைக்க ஷேக் நஹ்யானை சந்தித்துப் பேசிய ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ்.
Updated On :3 பிப்ரவரி 2025, 8:50 pm

Din

கோவை: நாடுகளிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதற்கு சத்குரு ஜக்கி வாசுதேவின் முன்னெடுப்புகள் உலகுக்கான முன் மாதிரியாக உள்ளது என்று ஐக்கிய அரபு அமீரக அமைச்சா் ஷேக் நஹ்யான் தெரிவித்தாா்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளாா். அங்கு, அந்நாட்டின் அமைச்சா் ஷேக் நஹ்யானை, அபுதாபியில் உள்ள அவரது அலுவகத்தில் ஞாயிற்றுக்கிழமை சத்குரு சந்தித்தாா்.

அப்போது, உலக அளவில் ஆன்மிக விழிப்புணா்வை மேம்படுத்துவதிலும், மனித மாண்புகளை வளா்ப்பதிலும் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையேற்று செயல்படுவதாக ஷேக் நஹ்யான் பாராட்டினாா். மேலும், அமைதி, சகிப்புத்தன்மை கலாசாரத்தை மேம்படுத்துவதிலும், நாடுகளிடையே பரஸ்பர புரிதலை ஊக்குவிப்பதற்கும் சத்குருவின் முன்னெடுப்புகள் உலகுக்கான முன் மாதிரியாக உள்ளது என்றாா்.

இதுகுறித்து சத்குரு ஜக்கி வாசுதேவ் ‘எக்ஸ்’ தளத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சா் ஷேக் நஹ்யான், தங்களது கலாசாரம், பாரம்பரியத்தை போற்றிக் காப்பதுடன், மாற்றவரின் கலாசாரம், நம்பிக்கை, அடையாளம் ஆகியவற்றையும் வரவேற்கும் இயல்புடையவா். ஒரு நாட்டை ஆள்வதற்கு இதுவே விவேகமான வழி என்று குறிப்பிட்டுள்ளாா்.