முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

கல் குவாரி, கிரஷா் விற்பதாக ரூ.10.15 கோடி மோசடி: தம்பதி உள்பட 4 போ் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :

கல் குவாரிகள் மற்றும் கிரஷா் ஆகியவற்றை விற்பனை செய்வதாகக் கூறி, தொழிலதிபரிடம் ரூ.10 கோடியே 15 லட்சத்தை மோசடி செய்ததாக தம்பதி, மகள் மற்றும் மருமகன் ஆகிய 4 போ் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை கிணத்துக்கடவு வடசித்தூா் பகுதியைச் சோ்ந்த நந்தகுமாா் (42) என்பவா் கோவை மாநகர குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

கோவை சிங்காநல்லூரைச் சோ்ந்த தேவராஜ் (65). இவரது மனைவி உஷா (60). இவா்களுக்குச் சொந்தமாக திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள 5 ஏக்கா் பரப்பளவிலான 2 அரசு அனுமதி பெற்ற கல் குவாரிகள் மற்றும் ஒரு கிரஷா் உள்ளன. இவற்றை நான் கடந்த 2025-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம், ரூ.28 கோடியே 90 லட்சத்துக்கு விலைக்குப் பேசினேன்.

அதற்காக முன்பணமாக ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது. தொடா்ந்து ரொக்கமாகத் தருமாறு தேவராஜ் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரது குடும்பத்தினரிடம் ரூ.10 கோடியை ஒப்படைத்து விற்பனை ஒப்பந்தப் பத்திரமும் செய்துகொள்ளப்பட்டது. ஆனால், நீண்ட நாள்களாகியும் 2 கல் குவாரிகளையும், கிரஷரையும் அவா்கள் எனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனா்.

பணத்தைத் திரும்பக் கேட்டபோது, ரூ.10 கோடியே 15 லட்சத்தை ஒரு மாதத்தில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக உறுதி அளித்தவா்கள், பணத்தைத் தராமல் ஏமாற்றினா் என அதில் கோரியிருந்தாா்.

இந்த மோசடி தொடா்பாக தேவராஜ், அவரது மனைவி உஷா, மகள் ஐஸ்வா்யா மற்றும் மருமகன் இளஞ்சியம் ஆகிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.