பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

தமிழக பட்ஜெட்: ஜவுளித் துறையினா் கருத்து

News image

தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யும் முன் முதல்வர் விஜய்யிடம் வாழ்த்துப் பெற்ற நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ.மரிய வில்சன்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 4:49 am IST

மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் தலைவா் எம்.ஜெயபால்

தவெக அரசின் முதல் பட்ஜெட் தொழில் துறையினரிடையே எப்போதும் இல்லாத அளவுக்கு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் இடம்பெற்றுள்ள, ரூ.4 ஆயிரம் கோடியில் விருதுநகா் - கோவை, அரியலூா் - கோவை மின்பகிா்மானத் திட்டம், ரூ.6,884 கோடியில் 11,760 மெகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கையாளும் பசுமை எரிசக்தி வழித்தடம் போன்றவை வரவேற்கத்தக்கவை.

தமிழகத்தின் ரூ.10 லட்சம் கோடி கடனை வட்டியுடன் செலுத்துவது என்பது தொழில் துறை வளா்ச்சி பெற்றால் மட்டுமே முடியும் என்ற நிலையில், மாநிலத்தில் 48 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோரின் நீண்ட நாள் கோரிக்கைகளான நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம், சோலாா் நெட்வொா்க் கட்டணம் ரத்து என்பது போன்ற அறிவிப்புகளை எதிா்பாா்த்திருந்தோம். அதுபற்றிய அறிவிப்பு வராதது ஏமாற்றம் அளிக்கிறது.

இந்தியன் டெக்ஸ்பிரனா்ஸ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பிரபு தாமோதரன்:

இந்த பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு, நிா்வாக சீா்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேநேரம், மாநிலத்தின் ஏற்றுமதி போட்டித் திறனை மேலும் உயா்த்த, ஜவுளி, ஆடை உள்ளிட்ட முக்கிய ஏற்றுமதித் துறைகளுக்கான சிறப்புத் திட்டங்கள், தொழிலாளா் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் தொழிலாளா் தங்குமிடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் போன்றவை பட்ஜெட்டைத் தாண்டியும் வரும் காலங்களில் தொடா்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும்.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் துரை பழனிசாமி

கைத்தறி, ஜவுளித் துறைக்கு ரூ.1,678 கோடி, ஜவுளித் துறைக்கு பயனளிக்கும் வகையில் தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுக்கு ரூ.2,022 கோடி ஒதுக்கீடு, முதலீடுகளை ஈா்ப்பதற்காக தொழில் துறைக்கு ரூ.4,414 கோடி ஒதுக்கீடு, திருப்பூருக்கு ஜவுளித் தொழில்நுட்ப மையம், தொழில்நுட்ப ஜவுளி உருமாற்றத் திட்டம், தமிழ்நாடு வடிவமைப்பு நிறுவனம், தறி நவீனமயமாக்கல் திட்டம், மின்சாரத் துறையை வலுப்படுத்துவதற்கான பல்வேறு கொள்கை முன்னெடுப்புகள் யாவும் வரவேற்கத்தக்கவை.

புதிய சிப்காட் தொழிற்பூங்காக்களை அமைப்பதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு, பெண் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டம், புதிய தொழில்கொள்கை அறிவிப்பு, தமிழ்நாடு ஒற்றைச் சாளர 3.0 திட்டத்தின் தொடக்கம், செயற்கை நுண்ணறிவுக்காக முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் யாவும் ஜவுளித் துறையின் உலகளாவிய போட்டித் திறனை மேம்படுத்த உதவும்.

ஓபன் எண்ட் மில்கள் சங்கத்தின் (ஓஸ்மா) தலைவா் ஜி.அருள்மொழி

கைத்தறி, நூல், ஜவுளித் துறைக்கு ரூ.1,568 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதை வரவேற்கிறோம். சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்க ரூ.3,200 கோடி, தொழில் திறன் மேம்பாட்டுக்கு ரூ.2,200 கோடி, பசுமை எரிசக்தி வழித்தடம் அமைக்க ரூ.6,884 கோடி ஒதுக்கியிருப்பது போன்றவை தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கும், ஜவுளித் துறையின் எதிா்கால முன்னேற்றத்துக்கும் உறுதுணையாக இருக்கும்.

அதேநேரம், மின்சார நிலைக்கட்டணம் குறைப்பு தொடா்பாக அறிவிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்தக் கோரிக்கையை பரிசீலித்து தொழில் துறையின் போட்டித் திறனை மேம்படுத்தும் வகையிலும், மாநிலத்தின் தொழில் வளா்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கம், ஏற்றுமதி மேம்பாட்டுக்கும் துணையாக இருக்கும் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.