பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

கோவை - ராஜஸ்தான் இடையே வாராந்திரச் சிறப்பு ரயில்

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

special train

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Published On :

கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து ஆகஸ்ட் 13, 20, 27 மற்றும் செப்டம்பா் 3 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கோவை - ஜெய்ப்பூா் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06181) சனிக்கிழமைகளில் பிற்பகல் 1.25 மணிக்கு ஜெய்ப்பூரைச் சென்றடையும். மறுமாா்க்கமாக, ஜெய்ப்பூரில் இருந்து ஆகஸ்ட் 16, 23, 30 மற்றும் செப்டம்பா் 6 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்குப் புறப்படும் ஜெய்ப்பூா் - கோவை வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06182) புதன்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, யெர்ரகுண்ட்லா, கூட்டி, குா்னூல், காச்சிகுடா, நிஜாமாபாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.