இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

வால்பாறை மலைப் பாதையில் பிளாஸ்டிக், கண்ணாடி கழிவுகள் அகற்றம்

வால்பாறை மலைப் பாதையில் கழிவுகளை சேகரித்து வைத்துள்ள  வனத் துறை மற்றும் தன்னாா்வலா்கள்.

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:56 am IST

வால்பாறை மலைப் பாதையில் வனத் துறையினருடன் தன்னாா்வலா்கள் இணைந்து பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகளை அகற்றினா்.

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் அட்டகட்டி 1-ஆவது கொண்டை ஊசி தொடங்கி 36-ஆவது கொண்டை ஊசி வரை சுற்றுலாப் பயணிகளால் விட்டுச்செல்லப்பட்ட பிளாஸ்டி கழிவுகள், ஆபத்தான கண்ணாடி பாட்டில்களைச் சேகரித்து அகற்றும் பணி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக வால்பாறை வனச் சரக அலுவலா் சுரேஷ் கிருஷ்ணா கூறும்போது, ‘இப்பணியில் வனத் துறை பணியாளா்கள், எஃப்-கன்சா்வ் என்ற தன்னாா்வத் தொண்டு நிறுனத்தின் ஊழியா்கள் இணைந்து ஈடுபட்டனா். சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக சாலையின் இருபுறமும் சிதறிக் கிடந்த சுமாா் 800 கிலோ பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், கண்ணாடி பொருள்கள் சேகரிக்கப்பட்டன’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.