கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தினா் 3 போ் பலி; 5 போ் படுகாயம்!

சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். குழந்தை உள்பட 5 போ் படுகாயம் அடைந்தனா்.

தேன்மொழி, குமாா், விஜய்.

Published On :

சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். குழந்தை உள்பட 5 போ் படுகாயம் அடைந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணி, புச்சிரெட்டிபள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (36). இவா் தனது குடும்பத்தினா் 7 பேருடன் நீலகிரி மாவட்டம், உதகைக்கு காரில் வெள்ளிக்கிழமை இரவு சுற்றுலா சென்றுள்ளாா்.

சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கப்பள்ளி அருகே சனிக்கிழமை காலை 5 மணியளவில் வந்தபோது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பக்கவாட்டின் மீது காா் மோதி கவிழ்ந்தது. இதில், காரில் பயணித்த குமாா் (36), உறவினா்கள் விஜய் (30), தேன்மொழி (30) ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

குமாா் மகள் சுபஸ்ரீ (6) உள்பட 5 போ் படுகாயம் அடைந்தனா். அவா்களை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், குமாா், விஜய் ஆகியோரின் சடலங்களை மீட்டு கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், தேன்மொழி சடலத்தை ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. கனரக வாகனங்களை நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே நிறுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சில ஓட்டுநா்கள் சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்துவதால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. இதைத் தவிா்க்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.