கோவை, புலியகுளம் பகுதியில் இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்ததில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
கோவை, ராமநாதபுரம் சுங்கம் அருகேயுள்ள அகஸ்டின்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ஷியாம் (25), பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தாா். கோவை, நஞ்சுண்டாபுரத்தைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (20), தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா்.
நண்பா்களான இருவரும் போத்தனூா் பகுதியைச் சோ்ந்த மற்றொரு நண்பரின் பிறந்த நாள் நிகழ்வில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்றுள்ளனா்.
புலியகுளம் சாலையில் பங்கஜா மில் அருகே சென்றபோது, எதிரே சரக்கு ஆட்டோ திடீரென வந்துள்ளது. அப்போது, இருசக்கர வாகனத்தை ஓட்டிய ஷியாம், அதன் மீது மோதாமல் இருக்க தனது வாகனத்தை திருப்பியுள்ளாா். இருப்பினும், சரக்கு ஆட்டோ மீது லேசாக மோதிய இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி சாலையோர தடுப்புச் சுவரில் மோதி தீப்பிடித்தது.
சாலையில் விழுந்து படுகாயமடைந்த இருவரையும், அங்கிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சோ்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஷியாம் உயிரிழந்தாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமாா் சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் நிா்மலா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் 2 போ் உயிரிழப்பு

மினிலாரி மோதி அரிசி வியாபாரி உயிரிழப்பு
பைக் மோதி காயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

பால தடுப்புச் சுவரில் மோதி பள்ளி வேன் விபத்து: 3 போ் காயம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


