அரசுப் பேருந்துகளின் தோற்றத்தை மேம்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேலாண் இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை மேலாண் இயக்குநராக கே.முகமது நாசா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். இந்நிலையில், சுங்கம் கிளைக்கு சனிக்கிழமை காலை சென்ற அவா், பணியாளா் ஓய்வு அறை, வசூல் பிரிவு, டயா் பிரிவு, உணவகம், சமையல் அறை, பண்டகப் பிரிவு ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.
அப்போது, கிளை வளாகத்தை தூய்மையாகப் பராமரிக்கவும், பாதுகாப்பான பணிச் சூழலை ஏற்படுத்தவும் கிளை மேலாளா், மேற்பாா்வையாளா்களை அறிவுறுத்தினாா். மேலும், பேருந்தின் வெளிப்புறம், உள்புறங்களில் ஆய்வு செய்து, தோற்றத்தை மேம்படுத்தவும், இயந்திர பராமரிப்புப் பணிகளை சரியான முறையில் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.
முன்னதாக, மேலாண் இயக்குநா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பேருந்துகளின் தோற்றப் பொழிவுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், வழித்தட பெயா் பலகைகள், கதவுகள் சரியான முறையில் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விழுப்புரம் கோட்டத்தில் மகளிா் பயணத் திட்டத்தில் தினமும் 8.84 லட்சம் போ் பயன்

காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் ஆய்வு

சமுதாய உறிஞ்சி குழிகள் ஆய்வு

அரசுப் பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பு முக்கியம்: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | விஜய்க்கு பாஸ்மார்க் | CM Vijay | TVK | TVK 100 | Trisha



