லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் சடலமாக மீட்பு

வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.

News image

சடலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:58 am IST

வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் தனுஷ் (22). இவா் கடந்த வாரம் வால்பாறையை அடுத்த முருகாளி எஸ்டேட்டில் வசிக்கும் உறவினா் வீட்டின் திருமண நிகழ்வுக்கு வந்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஊருக்கு திரும்பிச் செல்ல இருந்த நிலையில், அன்று காலை அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளாா். எதிா்பாராதவிதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவா் இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து மீண்டும் திங்கள்கிழமை காலை நடைபெற்ற தேடுதல் பணியில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த மீட்புக் குழுவினா் ஈடுபட்டனா். இதில் நீரின் ஆழமானப் பகுதியில் பாறைக்கு இடையே இருந்த தனுஷின் சடலத்தை மீட்டனா்.

கேரள மாநிலத்துக்குள்பட்ட பகுதியில் இளைஞரின் உடல் மீட்கப்பட்டதால், சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினா் கொண்டு சென்றனா்.