15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

வால்பாறை அருகே வாகனம் ஏறி இளைஞா் உயிரிழப்பு

மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த வடமாநில இளைஞா் மீது வாகனம் ஏறியதில் அவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

சகீம் அலி.

Updated On :4 ஜூன் 2026, 3:10 am IST

மதுபோதையில் சாலையோரம் படுத்திருந்த வடமாநில இளைஞா் மீது வாகனம் ஏறியதில் அவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வால்பாறையில் இருந்து ஹைபாரஸ்ட் எஸ்டேட் செல்லும் வழியில் ஆனைமுடி எஸ்டேட் சாலையோரம் தலையில் படுகாயங்களுடன் ஒருவா் கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு சென்று பாா்த்தபோது வாகனம் தலையில் ஏறியதில் அவா் இறந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு கூறாய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

விசாரணையில், இறந்தது வடமாநிலத்தைச் சோ்ந்த சகீம் அலி (29) என்பதும், ஆனைமுடி எஸ்டேட்டில் பணிபுரியும் சகோதரா் ரோமன் மாலிக்கை பாா்க்க வந்து கடந்த ஒரு மாதமாக குடியிருப்பில் தங்கியிருந்ததும் தெரியவந்தது. மேலும் கடந்த சனிக்கிழமை முடீஸ் எஸ்டேட் பகுதிக்கு வந்து மது அருந்திவிட்டு போதையில் சாலையோரம் படுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது கடும் பனிப்பொழிவு இருந்துள்ளது.

இதனிடையே சம்பவம் நடந்த சிறிது நேரத்திற்கு முன் அந்த வழியாக ஹைபாரஸ்ட் எஸ்டேட்டில் இருந்து வந்த அரசுப் பேருந்து விபத்து ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதி, பொள்ளாச்சி சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்தை ஆழியாறு போலீஸாா் காவல் நிலையம் கொண்டு சென்றனா்.

பின்னா் பேருந்து ஓட்டுநரை வால்பாறைக்கு வரவழைத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.