கஞ்சிக்கோடு பகுதியில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கோவை - பாலக்காடு இடையேயான ரயில் சேவை முழுவதுமாக வியாழக்கிழமை (மாா்ச் 5) ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பொறியியல் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (மாா்ச் 5) காலை 7.20 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு - கோவை ரயில் (எண்: 66606) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் கோவை - மங்களூரு இன்டா்சிட்டி ரயில் (எண்: 22610) கோவை - பாலக்காடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பாலக்காட்டில் இருந்து காலை 7 மணிக்கு மங்களூருக்கு புறப்பட்டுச் செல்லும். இதேபோல பாலக்காடு டவுன் நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு புறப்படும் பாலக்காடு டவுன் - திருச்சி ரயில் (எண்: 16844) பாலக்காடு - கஞ்சிக்கோடு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ன்று காலை 7 மணிக்கு கஞ்சிக்கோடு நிலையத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.
தொடர்புடையது

ராமேசுவரத்துக்கு ரயில் சேவை இரு நாள்களுக்கு பகுதியளவு ரத்து

பொறியியல் பணி: பாலக்காடு - திருச்சி ரயில் பகுதியாக ரத்து

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

