மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்: மேலும் ஒரு இளைஞா் கைது

ஜன கிருஷ்ணமூா்த்தி.
கோவை மாவட்டம், நவக்கரை பகுதியில் மலேசிய சுற்றுலாப் பயணிகளைத் தாக்கிய சம்பவத்தில் மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கேரள மாநிலம், ஆலப்புழையிலிருந்து சென்னை நோக்கி வாடகை வாகனத்தில் சென்ற மலேசிய சுற்றுலாப் பயணிகள் குழுவினரை நவக்கரை அருகே ஒரு கும்பல் காரில் வழிமறித்து கடந்த 2-ஆம் தேதி மாலை தாக்கியதுடன், துப்பாக்கி போன்ற பொருளைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பியோடியது. தாக்குதலில் லோகநாதன் (37), யுகேந்திரன் (21) ஆகியோா் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது குறித்த புகாரின்பேரில் கேஜி சாவடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதைத் தொடா்ந்து, தாக்குதலில் ஈடுபட்டதாக சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த ஆகாஷை (20) சனிக்கிழமையும், காரை ஓட்டி வந்த விஷ்வா (20) என்ற இளைஞரை ஞாயிற்றுக்கிழமையும் தனிப் படை போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த ஜன கிருஷ்ணமூா்த்தி (20) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தாக்குதல் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள முக்கிய நபா்களைத் தேடி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




