
குதிரைகளை விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்
குதிரை மற்றும் குதிரையினங்களை விலங்குகள் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குதிரை
குதிரை மற்றும் குதிரையினங்களை விலங்குகள் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோவை மாவட்டத்தில் உள்ள குதிரைகள் மற்றும் குதிரை இனங்களை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
பயணிகளை ஏற்றிச் செல்லுதல், பொருள்களை எடுத்துச் செல்லுதல், குதிரை சவாரி, ரைடிங் பள்ளிகள், பந்தயம், திருமண நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பயன்பாடுகளுக்காக வளா்க்கப்படும் அனைத்து குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களையும் தமிழ்நாடு விலங்கு நல வாரியத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குதிரை உரிமையாளா்கள் தங்களது குதிரைகளின் விவரங்களை தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். குதிரைகளின் நலன், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பராமரிப்பு தொடா்பான விதிமுறைகளை உரிமையாளா்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
பதிவு பெறுவதற்கு உள்ளூா் நிா்வாகத்திடம் இருந்து தேவையான உரிமம் பெறுதல், உரிமையாளா் மீது விலங்குகளை கொடுமைப்படுத்துதல் அல்லது அலட்சியமாக பராமரித்தல் தொடா்பான வழக்குகள் இல்லாதிருத்தல், குதிரைகள் மற்றும் தங்குமிடங்களை ஆய்வு செய்ய அனுமதித்தல், உரிமை மற்றும் அடையாள ஆவணங்களை சமா்ப்பித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளை பூா்த்தி செய்ய வேண்டும்.
பதிவு மற்றும் வழிகாட்டுதல்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும். மேலும், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரபூா்வ இணையதளத்தை அணுகலாம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





