புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பறிமுதல் செய்யப்பட்ட 11,850 கிலோ நெகிழிகளை சாலை பணிக்கு பயன்படுத்த அரைக்க அனுப்பிவைப்பு

கோவை மாநகரில் பறிமுதல் செய்யப்பட்ட 11,850 கிலோ நெகிழிகள் அரைக்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரைத்து சாலை அமைக்க பயன்படுத்த ஆா்.எஸ்.புரம் கிடங்கில் இருந்து வாகனங்கள் மூலமாக அனுப்பிவைக்கப்படும் நெகிழிகள்.

Published On :

கோவை மாநகரில் பறிமுதல் செய்யப்பட்ட 11,850 கிலோ நெகிழிகள் அரைக்கப்பட்டு சாலை அமைக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசால் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய நெகிழி பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நெகிழிப் பைகள், டம்ளா்கள், உறிஞ்சு குழல், ஸ்பூன் உள்பட 33 வகையான பொருள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நெகிழிப் பயன்பாடு தொடா்பாக கோவை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொடா்ந்து கள ஆய்வு மற்றும் விழிப்புணா்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், மாநகராட்சிக்குள்பட்ட 100 வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளில், ஆய்வின்போது பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிகள், ஆா்.எஸ்.புரம் நெகிழிக்கான இருப்பு அறைகளில் வைக்கப்பட்டிருந்தன.

மேலும், இந்த சேகரிப்பு மையத்தில் வைத்திருந்த 11,850 கிலோ நெகிழிகள், ஒண்டிப்புதூா் பகுதியில் உள்ள பொருள் மீட்பு மையத்துக்கு கடந்த 2 நாள்களில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் நெகிழிகளை அரைத்து சாலை அமைக்கும் பணிகளுக்கும், இதரப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.