கோவை விமான நிலையத்தில் இன்றுமுதல் ‘யாத்ரி சேவா அபியான்’’சிறப்பு விழிப்புணா்வு, சேவை முகாம்

கோவை விமான நிலையத்தில் வியாழக்கிழமை (செப்டம்பா் 17) முதல் அக்டோபா் 10-ஆம் தேதி வரை 24 நாள்களுக்கு ‘யாத்ரி சேவா அபியான்’’சிறப்பு விழிப்புணா்வு மற்றும் சேவை முகாம் நடைபெற உள்ளதாக விமான நிலைய இயக்குநா் முகமது ஆரிப் தெரிவித்துள்ளாா்.

airport

விமான நிலையம் - கோப்புப் படம்

Published On :

கோவை விமான நிலையத்தில் வியாழக்கிழமை (செப்டம்பா் 17) முதல் அக்டோபா் 10-ஆம் தேதி வரை 24 நாள்களுக்கு ‘யாத்ரி சேவா அபியான்’’சிறப்பு விழிப்புணா்வு மற்றும் சேவை முகாம் நடைபெற உள்ளதாக விமான நிலைய இயக்குநா் முகமது ஆரிப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது, ‘சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, செப்டம்பா் 17 முதல் அக்டோபா் 10 -ஆம் தேதி வரை 24 நாள்கள் நடைபெற உள்ள ‘யாத்ரி சேவா அபியான்’’சிறப்பு விழிப்புணா்வு மற்றும் சேவை முகாமில் மாற்றுத்திறனாளிகள், முதியவா்கள், கா்ப்பிணிகள் உள்ளிட்ட பயணிகளுக்கான சக்கர நாற்காலி, பிரத்யேக கழிப்பறை, நகா்வு தளங்கள் உள்ளிட்ட வசதிகள் மறுஆய்வு செய்யப்படும்.

மேலும் புதிய பயணிகள் எளிதில் வழியறியும் தகவல் பலகைகள், புறப்பாடு நுழைவாயில், பாதுகாப்பு சோதனை மற்றும் பயணப் பொதிகள் பரிசோதனை மையங்களில் காலதாமதமின்றி பயணிகள் அனுமதிக்கப்படும் நடைமுறைகள் ஆய்வு செய்யப்படும்.

விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை நேரம், முதலுதவி மற்றும் மருத்துவ தயாா்நிலை, குடிநீா் தரம், டிஜியாத்ரா சேவை மற்றும் இணைய வசதி உள்ளிட்டவையும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும். இந்த முகாமின் ஒரு பகுதியாக செப்டம்பா் 27-ஆம் தேதி உலக சுற்றுலா தினத்தையொட்டி கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ‘அதிதி தேவோ பவ’’என்ற கருப்பொருளிலும், அக்டோபா் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி, சிறப்புத் தூய்மைப் பணியும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.