கரூரில் உதவியது யார்? ஓடியது யார்? - முதல்வர் விஜய் பேச்சுக்கு கனிமொழி கண்டனம்!கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்
/

வாஜ்பாய் மறைவு: அரசியல் கட்சியினர் இரங்கல்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, அரசியல் கட்சியினர் பங்கேற்ற மௌன ஊர்வலம், இரங்கல் கூட்டம் பெருந்துறையில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :20 ஆகஸ்ட் 2018, 8:54 am IST

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, அரசியல் கட்சியினர் பங்கேற்ற மௌன ஊர்வலம், இரங்கல் கூட்டம் பெருந்துறையில் சனிக்கிழமை நடைபெற்றது.
 பெருந்துறை, அண்ணா சிலை அருகே பாஜக பெருந்துறை தொகுதி பொறுப்பாளர் இமயம் சந்திரசேகர் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. அண்ணா சிலையில் இருந்து துவங்கிய ஊர்வலமானது, பங்களா வீதி, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், ராஜ வீதி, குன்னத்தூர் சாலை வழியாகச் சென்று பெருந்துறை, பங்களா வீதியில் நிறைவடைந்தது. அங்கு, அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
 இதில், பெருந்துறை அதிமுக ஒன்றியச் செயலாளர் விஜயன், திமுக ஒன்றியச் செயலாளர் கே.பி.சாமி, காங்கிரஸ் ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் சி.காந்தி, மூத்த தலைவர் பி.எஸ்.கே.பாட்ஷா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொருளாளர் கே.கே.சி பாலு உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.