அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.46.17 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் ரூ. 46.17 லட்சத்துக்கு நடைபெற்றது. 
Published on

அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் ரூ. 46.17 லட்சத்துக்கு நடைபெற்றது. 
இங்கு வார ஏலத்துக்கு 21,451 தேங்காய்கள் கொண்டுவரப்பட்டன. இதில், சிறியவை ரூ.8.70-க்கும், பெரியவை ரூ.24-க்கும் என மொத்தம் ரூ.2,90,342-க்கு ஏலம் போனது. தேங்காய்பருப்பு கிலோ ரூ.118.29 முதல் ரூ.137.29 வரை என மொத்தம் ரூ.94,250-க்கும்,  துவரை, கிலோ ரூ.35.49 முதல் ரூ.43.89 வரை என மொத்தம் ரூ.40,21,593-க்கும் ஏலம் போனது. 
மக்காச்சோளம் 47 மூட்டைகள் வரத்து இருந்தது. இதில், கிலோ ரூ.14.42 முதல் ரூ.12.61 வரை என மொத்தம் ரூ.47,729-க்கும்,  நரிப்பயிறு கிலோ ரூ.47.01 முதல் ரூ.54.89 வரை என மொத்தம் ரூ.1,12,094-க்கும் விற்பனையானது. உளுந்து  6 மூட்டைகள் வரத்து இருந்தது. இதில், கிலோ ரூ.41.10 முதல் ரூ.49.65 வரை என மொத்தம் ரூ.4,722-க்கும், ஆமணக்கு கிலோ ரூ.37.39 முதல் ரூ.38.09  வரை என மொத்தம் ரூ.6,680-க்கு ஏலம் போனது. 
 அவரை(10 மூட்டைகள்),  கிலோ ரூ.40.19 முதல் ரூ.45.19 வரை என  மொத்தம் ரூ. 5 ,511-க்கும்,  பாசிப்பயிறு, கிலோ ரூ.52.19 முதல் ரூ.64.15 வரை என மொத்தம் ரூ.9,879-க்கும்,  எள், கிலோ ரூ.61.69 முதல் ரூ.82.29 வரை என மொத்தம் ரூ.22,644 -க்கும்,  தட்டைப்பயிறு, கிலோ ரூ.42.72 முதல் ரூ.52.62 வரைஎன மொத்தம் ரூ.2,331-க்கும் விலை போனது. 
விற்பனைக்கு வந்த 1,305 மூட்டைகள், 1216.39 குவிண்டால் விலை பொருள்கள் ரூ.46 லட்சத்து 17 ஆயிரத்து 775-க்கு ஏலம் போனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com