தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

குடிநீர் விநியோகிக்கக் கோரி கிராம மக்கள் மனு

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் துண்டிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட

Updated On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் துண்டிக்கப்பட்டுள்ள குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைகேட்பு முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதாவிடம்  மனு அளித்துள்ளனர்.
 இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த மனு:
 மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி, சாவடிப்பாளையம்புதூர் பகுதியில் 2016-இல் அமைக்கப்பட்ட குடிநீர்த் தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. சில காலம் கழித்து இணைப்புத் துண்டிக்கப்பட்டது. 
இதுதொடர்பாக அப்பகுதியின் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வீதியில் உள்ள குழாய்கள் மூலம்  தண்ணீர் விநியோகிக்க வேண்டும் எனவும், அனுமதி இல்லாமல் உள்ள இணப்புகளைத் துண்டிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.  
 இந்நிலையில், அனுமதி இல்லாத ரைஸ் மில், டிரன்ஸ்பார்மர் வீதி, வன்னியர் 
வீதி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. அதே ஊரைச் சேர்ந்த சிலர் அனைத்து வீதிகளிலும் உள்ள முகப்பில் குழாய் அமைத்த பிறகே  தண்ணீரை விநியோகிக்க வேண்டும். அதுவரை குடிநீரை விநியோகிக்கக் கூடாது எனத் தகராறு செய்து குடிநீர் விநியோகத்தைத் தடுத்துவிட்டனர்.
 இது நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகும். கடந்த 10 நாள்களாக குடிநீர் விநியோகம் முடங்கிப்போயுள்ளதால் அனைவரும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குடிநீர் விநியோகத்தைத் தடுக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.