நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 21 பேர் கைது

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்தும் ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :30 ஜனவரி 2024, 6:38 pm IST

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்தும் ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அங்கு 100 நாள்களுக்கும் மேல் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் மாதையன் தலைமையில் பலர் ஆசிரியர் காலனி பகுதியில் திரண்டனர். அங்கிருந்து பறை இசை முழங்க ஊர்வலமாகச் சென்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்ற கோரிக்கைக வலியுறுத்தி முழக்கமிட்டனர். பெருந்துறை சாலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.