குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஈரோட்டில் புதிய குளம் அமைக்கும் பணி துவக்கம்

ஊருக்கு ஒரு குளம் திட்டத்தின்கீழ் ரூ10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன்  புதிய குளம் அமைக்கும் பணிகள்  துவங்கியது.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்
Updated On :14 ஆகஸ்ட் 2020, 10:31 am

DIN

ஊருக்கு ஒரு குளம் திட்டத்தின்கீழ் ரூ10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன்  புதிய குளம் அமைக்கும் பணிகள்  துவங்கியது.

ஈரோட்டில்  47 ஆவது நீர்நிலையாக காசிபாளையம் கண்ணகி நகர் மகாராஜா திரையரங்கம் பின்புறம், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் அருகில் அமைந்துள்ள கசிவுநீர் ஓடை புறம்போக்கில் ரூ10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் பூஜையுடன் குளம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சி,கதிரவன் தலைமை தாங்கினார். ஈரோடு  கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தென்னரசு, மேற்கு சட்டமன்ற உறுப்பினர்    கே.வி.ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷனின் தலைவர் சின்னசாமி வரவேற்புரை வழங்கினர். ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷனின் நீர் மேலாண்மை குழுத்தலைவர் ராபின் திட்ட விளக்கவுரை ஆற்றினார்.    

இவ்விழாவில்  பகுதி கழக செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீஸ், தங்கதுரை, ஆவின் துணை தலைவர் குணசேகரன்,  அரசு அலுவலர்கள்  மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.   இந்நிகழ்ச்சியில் பேசிய  நிறுவனத்தின் தலைவர் சின்னசாமி, “தற்போது தமிழக அரசு நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இது போன்ற பணிகளை அரசு மட்டுமே செய்ய வேண்டும் என எதிர்பார்க்காமல் பொது மக்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்பினர் என அனைவரும் பங்களிப்புடன் சேர்ந்து செய்வதன் மூலம் பணி எளிதில் முடிவடையும். இதனை கருத்தில் கொண்டு எங்கள் தொண்டு நிறுவனத்தின் மூலம் நீர்நிலை பாதுகாத்தல், நீர்நிலைகளில் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருதல் போன்ற பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம்.

இதுவரை 46 குளம், குட்டை, ஏரி, ஓடை, கால்வாய் மற்றும் தடுப்பணை போன்ற நீர்நிலைகளை சுத்தம் செய்தும் தூர்வாரி ஆழப்படுத்தி நீர் சேமிக்க வழி செய்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக இது 47வது நீர் நிலை மேம்பாடு ஆகும். இது அரசிடம் முறையாக அனுமதி பெற்று செய்யப்படுகின்றது இதற்கு தேவையான நிதிகள் எங்களது பங்களிப்பு மட்டுமின்றி இந்த ஊர் பொது மக்களின் பங்களிப்பு இருந்தால் சிறப்பாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.