இ-பாஸ் தளர்வு: ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை
இ-பாஸ் வழங்குவதில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதையடுத்து ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளி மாவட்ட வியாபாரிகள் வரத்தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


இ-பாஸ் வழங்குவதில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதையடுத்து ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளி மாவட்ட வியாபாரிகள் வரத்தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு ஜவுளி சந்தையானது வாரம்தோறும் திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மதியம் நிறைவடையும். இங்கு 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் கலந்து கொண்டு ஜவுளிகளை மொத்தமாக கொள்முதல் செய்வர். இந்நிலையில் கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஜவுளி சந்தையும் மூடப்பட்டது. பின்னர் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஜவுளி சந்தை திறக்கப்பட்ட போதிலும், வெளி மாநில, வெளி மாவட்ட வியாபாரிகள் வருகை இன்றி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆன்லைனில் மட்டும் 10 சதவீதம் வியாபாரம் நடந்து வந்தது.
இந்நிலையில் தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகள் அளித்துள்ளதையடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜவுளிச் சந்தையில் வெளி மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இதன் மூலம் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த வாரம் 40 சதவீதம் வரை வியாபாரம் நடந்ததாக ஜவுளி சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு வாரச்சந்தை ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது, கரோனா பொது முடக்கத்தால் ஜவுளி வியாபாரம் கடுமையான நெருக்கடிக்கு சென்றுவிட்ட நிலையில் ஆன்லைன் மற்றும் சில்லரை வியாபாரம் மட்டுமே சிறிதளவு கை கொடுத்து வந்தது.
இந்நிலையில் தற்போது இ-பாஸ் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மதுரை, சேலம், நாமக்கல், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து ஜவுளிச் சந்தையில் மொத்த வியாபாரிகள் கலந்து கொண்டுள்ளனர். ஆனாலும் வெளி மாநிலத்தில் இருந்து வருவதற்கான இ-பாஸ் நடைமுறைகளில் தளர்வு இல்லாததால் வெளி மாநில வியாபாரிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. பல மாதங்களுக்கு பிறகு இந்தவாரம் தான் 40 சதவீதம் வரை வியாபாரம் நடந்துள்ளது. சில்லரை வியாபாரமும் இந்த வாரம் சற்று கூடுதலாக இருந்தது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...