ஆசிரியர் தகுதித்தேர்வில் தற்போதைய நிலை தொடரும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தற்போதைய நிலை தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


ஆசிரியர் தகுதித்தேர்வில் தற்போதைய நிலை தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள கன்னிமார் கரடுப்பகுதியில் ஜி.கே மூப்பனார் பிறந்த நாள் விழா விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு த.மா.க மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு வகையிலான விதைகளை தூவி மரக்கன்றுகளை நட்டினார்.
பின் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கரோனா பாதிப்பு குறைந்த பின்னர்தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். இது குறித்து முதலமைச்சர் தான் அறிவிப்பார். ஆசிரியர் தகுதித் தேர்வில் தற்போதைய நிலையே தொடரும்.” என்றார்.
மேலும், “ஒரு விவசாயி முதலமைச்சராக இருப்பதால் தான் விவசாயிகள் நலன் தெரிகிறது. தமிழகத்தில் நல்லாட்சி நடக்கிறது. தற்போதைய ஆட்சியில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை மூன்றாவது முறையாக நிறைந்துள்ளது. மேட்டூர் அணை 300 நாட்களுக்கு மேல் 100 அடியாக உள்ளது. கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு மண்டலம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பல லட்சம் மரக்கன்றுகளை நட்டார். அவர் வழியில் நடைபெறும் தற்போதைய ஆட்சியில் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.” என்றார்.
விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி ராமலிங்கம். தென்னரசு, தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் ஆறுமுகம், விடியல் சேகர், வேளாளர் மகளிர் கல்லூரி தாளாளர் சந்திரசேகர், பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வரதராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...