குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பவானி ஆற்றில் வெள்ளம்: அவிநாசி அத்திக்கடவு கட்டுமானப் பணிகள் பாதிப்பு

பவானி ஆற்றில் பெருக்கெடுத்த மழை வெள்ளத்தால் அவிநாசி அத்திக்கடவு திட்டம் நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகள் பாதிப்படைந்தன.

News image
காளிங்கராயன் அணைக்கட்டிலிருந்து வெளியேறிச் செல்லும் உபரி நீர்
Updated On :25 ஆகஸ்ட் 2020, 1:04 pm

DIN

பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் பவானி காளிங்கராயன் அணைக்கட்டுக்கு வினாடிக்கு 2,200 கன அடி உபரிநீர் பெருக்கெடுத்தது. அணைக்கட்டுக்கு கீழ்பகுதியில் நடைபெறும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் நீரேற்று நிலைய பணிகள் நடைபெறும் பகுதியை உபரிநீர் சூழ்ந்ததால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டது.

பவானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வடிகால் வழியாக மழைநீர்  பவானி ஆற்றுக்கு சென்றதால் ஆற்றில் நீரோட்டம் அதிகரித்தது. இதனால், பவானி காளிங்கராயன் அணைக்கட்டுக்கு நேற்று மாலை 166 கனஅடியாக இருந்த உபரிநீர் வரத்து, அதிகாலை விநாடிக்கு 2,200 கனஅடியாக அதிகரித்ததோடு,  உபரிநீர் காவிரி ஆற்றுக்கு பெருக்கெடுத்து சென்றது.

Story image

காளிங்கராயன் அணைக்கட்டுக்கு கீழ் பகுதியில் தற்போது அவினாசி - அத்திக்கடவு திட்டத்தின் முதன்மை நீரேற்று நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.  சுற்றிலும் மண் மூட்டைகளால்  தடுப்புகள் அமைக்கப்பட்டு தண்ணீர் உட்புகாத வகையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் மழைநீர் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெருக்கெடுத்து வந்ததால் கட்டுமான பணி நடைபெறும் பகுதியில் வெள்ளநீர் புகுந்தது. இதனால், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து, 3 ராட்சத மோட்டார்கள் வைக்கப்பட்டு உட்புகுந்த தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

பணிகள் நடைபெறும் பகுதியில் தேங்கியிருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டு பிற்பகலுக்கு பின் மீண்டும் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,200 கன அடி தண்ணீர் உபரி நீராக காவிரி ஆற்றுக்குச் சென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.