பவானியில் போக்குவரத்துக்கழக தொழில்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானியில் போக்குவரத்து கழக தொழில்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழக அரசு பேருந்து போக்குவரத்தை பாதுகாப்பு அம்சங்களுடன் உடனே இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பவானியில் போக்குவரத்து கழக தொழில்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஊராட்சிகோட்டையில் உள்ள போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் ஏ.எஸ்.தங்கராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் பி.மகேந்திரன், மத்திய சங்க துணைச் செயலாளர் எஸ்.இளங்கோவன், ஐஎன்டியூசி கிளைத் தலைவர் பி.முருகன், ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்கத்தின் துணை செயலாளர் எஸ்.ஏ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 288 ஏ-வைக் கைவிட வேண்டும். தனியார் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். அரசு போக்குவரத்தைப் பாதுகாப்பு அம்சங்களுடன் உடனே இயக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தொழிலாளர்களிடம் பறிக்கப்பட்ட விடுப்பையும், பிடித்தம் செய்த சம்பளத்தையும் திரும்ப வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும்.
டி.ஏ. அரியர்ஸ் உள்ளிட்ட பணப் பாக்கியினை உடனே வழங்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப் அனைத்து தொழில்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று முழக்கம் எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...