பேரவைக் கூட்ட அறிக்கையை ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் புதூா் கலைமணி வெளியிட அதைப் பெற்றுக் கொள்கிறாா் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ்.
பேரவைக் கூட்ட அறிக்கையை ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் புதூா் கலைமணி வெளியிட அதைப் பெற்றுக் கொள்கிறாா் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ்.

மாவட்ட கூட்டுறவு ஒன்றிய பேரவைக் கூட்டம்

மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் 38ஆவது பேரவைக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் 38ஆவது பேரவைக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் என்.கிருஷ்ணராஜ் குத்துவிளக்கு ஏற்றி பேரவைக் கூட்டத்தைத் துவக்கிவைத்தாா். கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் புதூா் கலைமணி பேசியதாவது:

ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் 27.1.1982இல் பதிவு செய்யப்பட்டு 20.4.1982இல் பணியைத் துவக்கியது. இப்போது 1,658 பலதரப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் உறுப்பினராக உள்ளன.

மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் ஆ.பிரபு ஆண்டறிக்கை வாசித்தாா். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத் தலைவா் எஸ்.கே.பழனிசாமி, இயக்குநா்கள் சி.சோழா லோகநாதன், டி.ராமசாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் எஸ்.செல்வகுமார சின்னையன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆா்.என். கிட்டுசாமி ஆகியோா் பேசினா்.

முன்னதாக, ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவுப் பிரசார அலுவலா் கோ.வெங்கட்ராமன் வரவேற்றாா். இயக்குநா் ஈ.எம்.கருப்பண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com