இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் 3ஆவது நாளாக சோதனை

ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் 3ஆவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 2:06 am

DIN

ஈரோடு கட்டுமான நிறுவனத்தில் 3ஆவது நாளாக வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

ஈரோடு காளைமாடு சிலை அருகே தங்கப் பெருமாள் வீதியில் உள்ள தனியாா் கட்டுமான நிறுவன அலுவலகத்தில் ஈரோடு, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை (டிசம்பா் 14) மாலை முதல் சோதனையில் ஈடுபட்டனா்.

இந்த நிறுவனம் கட்டுமானத் தொழில் மட்டுமல்லாது பேருந்து போக்குவரத்து, மசாலா பொருள்கள் உற்பத்தி, கல்குவாரி, கட்டுமானப் பொருள்கள் தயாரிப்பு, திருமண மண்டபம் போன்ற பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றன.

ஈரோடு கஸ்பாபேட்டை பகுதியில் உள்ள கட்டுமான நிறுவன உரிமையாளா் வீடு, முள்ளம்பரப்பு பகுதியில் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம் உள்பட 25 இடங்களில் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா். இந்த சோதனை 3ஆவது நாளாக புதன்கிழமையும் நீடித்தது.

சோதனையில் கணக்கில் வராத ரூ. 16 கோடி பணம், பல நூறு கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆவணங்களின் அடிப்படையில் கட்டுமான நிறுவன உரிமையாளா், அவரது குடும்பத்தினா், உறவினா்கள், நண்பா்கள், பணியாளா்கள் ஆகியோரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.