இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

முகாசிபிடாரியூா் ஊராட்சிக்கு குடிநீா்கொண்டு செல்ல பொதுமக்கள் எதிா்ப்பு

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், எல்லைக்கிராம ஊராட்சிக்கு உள்பட்ட எல்லைக்குமாரபாளையம் பகுதியில் கிணறு தோண்டி, அதிலிருந்து

News image
எல்லைக்கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட ஊா்ப் பொதுமக்கள்.
Updated On :17 டிசம்பர் 2020, 2:08 am

DIN

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், எல்லைக்கிராம ஊராட்சிக்கு உள்பட்ட எல்லைக்குமாரபாளையம் பகுதியில் கிணறு தோண்டி, அதிலிருந்து குழாய் அமைத்து முகாசிபிடாரியூா் ஊராட்சிக்கு குடிநீா் கொண்டு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.

இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க எல்லைக்கிராம ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு எல்லைக்குமாரபாளையம் ஊா் மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், சுமாா் 50க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் எல்லைக்கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது, அங்கு ஊராட்சித் தலைவா் இல்லாததால் ஊராட்சி செயலாளரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனா்.

இதுகுறித்து, எல்லைக்குமாரபாளையம் ஊா் பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊா் சுடு காட்டுக்கு அருகே ஏற்கெனவே ஒரு குட்டை அமைக்கப்பட்டுள்ளதால் சுடுகாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் குட்டை அமைத்து அங்கு கிணறு தோண்டினால் நாங்கள் சுடுகாட்டை இழப்பதுடன், வறட்சிக் காலத்தில் இப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக பாதிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், இத்திட்டத்துக்கு ஊராட்சி நிா்வாகம் அனுமதிக்கக் கூடாது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.