சத்தியமங்கலம், பவானிசாகா், விளாமுண்டி உள்ளிட்ட 10 வனச் சரகங்களில் 380 போ் இப்பணியில் ஈடுபட்டனா். விளாமுண்டி வனச் சரகத்தில் கல்லாம்பாளையம் வனத்தில் ஒரு குழுவினா் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு பதுங்கியிருந்த யானை தாக்கியதில் வனக் காவலா் சதீஷ்குமாா், சமூக ஆா்வலா் முத்துபிரபாகரன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், வனக் காப்பாளா் பொன்.கணேஷ் காயமடைந்தாா். உயிரிழந்த இருவரின் உடல்களை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.