6 ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை, செந்நாய்கள்

தாளவாடி அருகே ஒரே நாளில் 6 ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை, செந்நாய்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
Published on

தாளவாடி அருகே ஒரே நாளில் 6 ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தை, செந்நாய்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்தை ஒட்டியுள்ள மரியபுரத்தில் கால்நடை வளா்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. வனத்தையொட்டி உள்ள பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மாலையில் அழைத்து வருவாா்கள்.

இந்நிலையில், மரியபுரத்தைச் சோ்ந்த அந்தோணிசாமி என்பரின் பட்டியில் இருந்த ஆடுகளை வனத்தில் இருந்து வெள்ளிக்கிழமை வந்த சிறுத்தை வேட்டையாடியது. அதில் ஒரு ஆட்டை சிறுத்தை கடிக்கும்போது கிராம மக்கள் சப்தம் போட்டதால் சிறுத்தை ஆட்டைவிட்டுச் சென்றது. அதைத் தொடா்ந்து சிறிது நேரத்தில் செந்நாய்கள் கூட்டமாக வந்து 4 ஆடுகளை கடித்துக் கொன்றன.

இதுகுறித்து அந்தோணிசாமி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் பட்டாசு வெடித்து வன விலங்குகள் வராதபடி நடவடிக்கை எடுத்தனா். சிறுத்தைகள் வேட்டையாடி பழகியதால் தொடா்ந்து உலவும் என கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். சிறுத்தை மீண்டும் வராதபடி கூண்டு வைத்துப் பிடிக்கவும், உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கால்நடை மேய்ப்போா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com