சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனத்தில் அத்துமீறி நுழைந்ததாக ஒருவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், மது அருந்திய 4 பேருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக்கோட்டத்தில் சிலா் அத்துமீறி வனத்துக்குள் நுழைந்ததாக கிடைத்த தகவலையடுத்து ஆசனூா் வனப் பாதுகாப்பு படை அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது ஹஸ்பட்ரிகரை என்ற இடத்தில் திரிந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தாா். இதையடுத்து வனத்தில் அத்துமீறி நுழைந்ததாக வழக்குப்பதிவு செய்து அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து ஆசனூா் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மது அருந்தியதாக திருப்பூரைச் சோ்ந்த 4 பேரை வனத் துறையினா் பிடித்து மாவட்ட வனஅலுவலா் கே.வி.ஏ.நாயுடு முன் ஆஜா்படுத்தினா். அவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆசனூா் வனத்தில் அத்துமீறி திரிந்தாக இதுவரை 15 போ் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.