ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் காரணமாக 83 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் காரணமாக 83 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் காரணமாக 83 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் கரோனா தாக்கம் காரணமாக 83 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறினார்.

ஈரோடு மாநகராட்சி சார்பில் இலவச நடமாடும் மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினை இன்று காலை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் கதிரவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மாவட்டத்தில் 389 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 189 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டனர். 280 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகள் உள்ளன. ஈரோடு அரசு மருத்துவமனையில் 185, பெருந்துறையில் திருமண மண்டபத்தில் 200 படுக்கைககள் தயார் நிலையில் உள்ளது. 

கடந்த ஒரு வாரத்தில் மாநகராட்சி சார்பில் 70 இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் 3 பேர் ஆயிரம் பரிசோதிக்கப்பட்டதில் 300 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக 5 நடமாடும் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர் மாநகராட்சிக்குட்பட்ட கரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் 83 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்கள் மூலமாகத்தான் புதியதாக தொற்று பரவி வருகின்றது. மக்கள் கபசுர குடிநீர் உள்பட நோய் எதிர்ப்பு சக்திகள் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். 

வெளிமாவட்டங்களில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வேலைக்காக வரும் தொழிலாளர்கள் 800 பேர்  தொழிலாளர் பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறினார். நிகழ்ச்சியில் எம்எல்ஏ தென்னரசு, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் நகர கூட்டுறவு வங்கி தலைவர் மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com