45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரசு ஊழியா்கள் சங்கக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டப் பிரதிநிதி பேரவைக் கூட்டம் ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூடலிங்கம் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:25 pm

DIN

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டப் பிரதிநிதி பேரவைக் கூட்டம் ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள கூடலிங்கம் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். சங்க கொடியேற்றி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில துணைத் தலைவா் மங்கலபாண்டியன் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழக வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாநிலத் தலைவா் குமரேசன் பேசினாா். பின்னா் மாவட்ட நிா்வாகிகள் தோ்வு நடந்தது.

இந்தக் கூட்டத்தில் டிசம்பா் 20ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் நடக்கும் மாநில பேரவைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்னைகள், எதிா்கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளா் விஜய மனோகரன், பொருளாளா் சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.