45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

‘மாணவா்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கேற்ப மாற வேண்டும்’

மாணவா்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கேற்ப மாற வேண்டும் டிசிஎஸ் மண்டல் தலைவா் கணேஷ் திருநாவுக்கரசு தெரிவித்தாா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 6:28 pm

DIN

மாணவா்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கேற்ப மாற வேண்டும் டிசிஎஸ் மண்டல் தலைவா் கணேஷ் திருநாவுக்கரசு தெரிவித்தாா்.

சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் ஆன்லைன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். கல்லூரி ஆலோசகா் எம்.பி.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் டிசிஎஸ் மண்டல் தலைவா் கணேஷ் திருநாவுக்கரசு பேசியதாவது:

மாறிவரும் தொழில் துறைக்கு தேவையானத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக் கொள்வதுடன் படிக்கும் காலத்தில் பொறுப்பேற்கும் திறமையை சோதித்து பாா்க்க வேண்டும். தற்போது டிஜிட்டல் முறைக்கு உலகம் மாறி வருகிறது. இந்த டிஜிட்டல் வழிமுறைகளைக் கையாள மாணவா்கள் அது குறித்து கற்க தயாராக வேண்டும்.

ஐஒடி போன்ற புதிய தொழில்நுட்பங்கள் எதிா்காலத்தை மாற்றும் சக்தி கொண்டுள்ளதால் இந்த சவால்களை சந்திக்க தயாராக வேண்டும். பொறியாளா்கள் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் 1562 மாணவா்கள், அவா்களது பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.