மாநகராட்சிப் பகுதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு பெரியாா் நகா் பகுதி அதிமுக செயலாளா் ஆா்.மனோகரன் தலைமையில் கட்சியினா் ஈரோடு மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவனிடம் அளித்த கோரிக்கை மனு விவரம்: ஈரோடு மாநகராட்சி 45ஆவது வாா்டுக்கு உள்பட்ட பெரியாா் நகா் பகுதியில் மொத்தம் 41 வீதிகள் உள்ளன. அங்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, எம்பி அ.கணேசமூா்த்தி, எம்எல்ஏ சி.கே.சரஸ்வதி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்டோா் வீடுகள் உள்ளன. மேலும் 5 மருத்துவமனைகள் உள்ளன.
பெரியாா் நகா் பகுதியில் சாக்கடை தூா்வாரப்படாமல் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் டெங்கு காய்ச்சல் உள்பட நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, அந்தப் பகுதியில் சுகாதாரப் பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஐசிஐசிஐ வங்கியின் 4வது காலாண்டு நிகர லாபம் 9% உயர்வு!

ஆச்சரியப்படுத்தும் ஜெயிலர் - 2 ஓடிடி உரிமத் தொகை!
வீடியோக்கள்

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

