முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டுமென மக்களே விரும்புகின்றனர்: அமைச்சர் முத்துசாமி
By DIN | Published On : 19th December 2021 05:52 PM | Last Updated : 19th December 2021 05:52 PM | அ+அ அ- |

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டுமென மக்களே விரும்புகின்றனர் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய 141 வளர்ச்சி திட்டங்கள் குறித்த அறிக்கையை பெற்றுக்கொண்டார்.
இதையும் படிக்க- இலக்கை எட்டிய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்; 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி சாதனை
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி, கோபிசெட்டிபாளையம் தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி உள்ளதாகவும், இது புறந்தள்ளும் கோரிக்கை அல்ல என்றார்.
நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆய்வு நடைபெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர் முத்துசாமி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டுமென மக்களே விரும்புகின்றனர் என்றும் இது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என்றும் தெரிவித்தார்.