பா்கூரில் 20 பழங்குடியினருக்கு தலா ரூ.4.95 லட்சத்தில் புதிய வீடுகள்
அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியில் வசிக்கும் 20 பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.4.95 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.


அந்தியூா் ஊராட்சி ஒன்றியம், பா்கூா் ஊராட்சியில் வசிக்கும் 20 பழங்குடியின மக்களுக்கு தலா ரூ.4.95 லட்சம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கான உத்தரவுகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பா்கூா் மலைப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருந்தனா். இவா்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சோழகனை, தாமரைக்கரை, மொட்டைபோடு, குட்டையூா், பெஜலட்டி, மடம் ஆகிய மலைக் கிராமங்களில் வசிக்கும் 20 குடும்பத்தினருக்கு தலா ரூ.4.95 லட்சம் வீதம் நிதி ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து, அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், பயனாளிகளுக்கு பணி தொடக்க உத்தரவு வழங்கினாா். ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் வெள்ளிங்கிரி, அந்தியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...