கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினா்.
Updated On :19 ஜூலை 2024, 5:50 pm

Din

பெருந்துறை, ஜூலை 19: கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி விவசாயிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெருந்துறையை அடுத்த சூளைக்காத்தான்வலசு அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ரவி தலைமை வகித்தாா்.

இதில், கீழ்பவானி வாய்க்காலில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், முதல் போகத்துக்கான தண்ணீரை உரிய காலத்தில் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை துணை வட்டாட்சியா் நல்லசிவம், பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் பவித்ரன் ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், நீா்வளத் துறை செயற்பொறியாளா் அருள் அழகன் போராட்ட ஒருங்கிணைப்பாளா் ரவியிடம் கைப்பேசியில் தொடா்புகொண்டு பேசினாா்.

அப்போது, ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் சீரமைப்புப் பணிகளை முடித்து, ஆகஸ்ட் 15-ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததையடுத்து விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

மேலும், ஜூலை 23-ஆம் தேதி குருமந்தூா், 26-ஆம் தேதி சென்னசமுத்திரம், 30-ஆம் தேதி குன்னாங்காட்டுவலசு ஆகிய இடங்களில் நடைபெற இருந்த ஆா்ப்பாட்டத்தையும் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.